×

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக விரிவாக்கத்தின் நிலை என்ன? கனிமொழி எம்பி கேள்வி

புதுடெல்லி: மக்களவையில் திமுக எம்பி கனிமொழி எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்வியில்,\\”தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பசுமை ஹைட்ரஜன் மைய மேம்பாட்டின் ஒரு பகுதியாக உத்தேசிக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பு மற்றும் பிற விரிவாக்க செயல்பாடுகள் என்ன? மேலும் தூத்துக்குடி துறைமுகத்தை பல நீண்ட தூர கப்பல் வழித்தடங்களுக்கு இடையே பரிமாற்ற புள்ளியாக தரம் உயர்த்தும் திட்டம் ஏதேனும் ஒன்றிய அரசிடம் உள்ளதா? அப்படியென்றால், அதன் விவரங்கள் என்ன? இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன? என்று கேட்டிருந்தார்.

இதற்கு ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் அளித்த பதிலில், ‘‘தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை பசுமை ஹைட்ரஜன் மையமாக மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இத்தகைய மேம்படுத்துதலில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பச்சை அம்மோனியா சேமிப்பு வசதிகள், உப்புநீக்கும் ஆலை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வழித்தடம், ஜெட்டி எனப்படும் படகுத் துறைகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் அடங்கும். தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்தும் வகையில் மேலும் மெகா கன்டெய்னர் கலன்களை கையாளும் திறன் கொண்ட இரு கன்டெய்னர் முனையங்களை அமைக்க பொதுத்துறை-தனியார் பங்களிப்பு வகையில் புற துறைமுகத் திட்டம் தற்போது தயாராகி வருகிறது என தெரிவித்துள்ளார்.

The post தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக விரிவாக்கத்தின் நிலை என்ன? கனிமொழி எம்பி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Tuticorin V.U.C. ,Kanimozhi ,MB ,New Delhi ,DMK ,Lok Sabha ,Thoothukudi V.U.C. ,Dinakaran ,
× RELATED 96 எம்பி தொகுதிகள் மற்றும் 2...